குடியிருப்பு பகுதிகளில் புகுந்து 9 பாம்புகள்

Home

shadow

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்திய 9 பாம்புகளை, வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட்டனர்.

வன விலங்குகள் அதிகமாக காணப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக, சாலா வகையை சேர்ந்த மலைப்பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்க தொடங்கியுள்ளன. மேல்பட்டி, காவேரிப்பட்டினம் காமராஜர் நகர், அவதானப்பட்டி போன்ற பகுதிகளில் பாம்புகள் படையெடுப்பு அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் புகுந்த, மலை பாம்பு, சாரைப் பாம்பு உள்ளிட்ட 9 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து, வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்புகளுக்கு நோய் தொற்று உள்ளதா?, பாம்பின் எடை, நீளம் போன்றவை கணக்கிடப்பட்டு, பின்னர் அடர்ந்த காட்டு பகுதியில் விடப்பட்டது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்பு புகுந்தால், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறு தெரிவித்தால் உடனே பாம்புகள் பிடித்து செல்லப்படும் என்றும் கூறினர்.

இது தொடர்பான செய்திகள் :