குடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய விதி அமலுக்கு வந்தது!

Home

shadow


தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை முறைகேடுகளை தடுக்க புதிய 10 விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சமீப காலத்தில் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும், வசதி படைத்தவர்கள் மானிய பொருட்களை பெற குடும்ப அட்டைகளை பயன்படுத்துவதாகவும் தொடந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில், குடும்ப அட்டை முறைகேடுகளை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை தொடர்த்து மானிய பெருட்களை பெறுவதற்கான முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்படவேண்டிய குடும்பங்களுக்கான புதிய 10 விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்டுள்ள குடும்பம், 4 சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள குடும்பம், 5 ஏக்கருக்கும் மேல் சொந்தமாக நிலம் வைத்துள்ள விவசாயியின் குடும்பம், மூன்று படுக்கை அறை கொண்ட கான்கீரிட் வீடுகள் வைத்துள்ள குடும்பம், வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம், குறைந்தது ஒருவரை வருமான வரி செலுத்தும் உறுப்பினராக கொண்டுள்ள குடும்பம், மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றோரை உறுப்பினராக கொண்ட குடும்பம், வீட்டில் ஏ.சி பயன்படுத்தும் குடும்பம் இந்த வரையறைக்குள் வருகின்றன.
இந்த 10 விதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் அந்த குடும்பம் மானியங்களை பெற தகுதில்லாத குடும்பமாகும். மேலும் இதுவரை இது போன்ற குடும்பத்தினர் மேற்கூறிய விதிகளில் இருந்தும் சலுகை பெற்று வந்து இருந்தால் இனி வரும் காலங்களில் அது தடுக்கப்படும்.

இது தொடர்பான செய்திகள் :