குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

Home

shadow


     நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :