கொடைக்கானலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை

Home

shadow

  

     கொடைக்கானலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு விழாக்கால விடுமுறையை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர். குறிப்பாக மாலை வேளையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குவிந்திருந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். ஏரிசாலை பகுதிகளில் இருக்கும் அனைத்து கடைகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :