கோயம்பேடு மார்க்கெட் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், வியபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Home

shadow

சென்னை கோயம்பேட்டிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. பேருந்துகள், சரக்கு லாரிகள் என கோயம்பேடு சாலைகளில்  எந்நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கிறதுஇந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எதிரில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மிகவும் சேதம் அடைந்து காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடியே செல்கின்றனர். எனவே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சேதம் அடைந்த சாலைகளால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

      அதுமட்டுமல்லாமல் இந்த சாலைகளில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நாள்தோறும் இந்த வழியாக லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் நிலையில், இந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பல நாட்களாக நிலவி வரும் இந்த பிரச்சனைகளை தீர்க்க, அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

      எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :