கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

Home

shadow

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. இந்த வழக்கை சி.பி.சி..டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சசிகுமார் கொலை தொடர்பாக சதாம், சுபேர், அபுதாகீர், ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முபாரக்கை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பான செய்திகள் :