கோவை காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

Home

shadow

                      பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைசம் பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையில், 200-க்கும் மேற்பட்ட பெண்களை சம்பந்தப்பட்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்திருந்த அதிர்ச்சி தகவல் வெளி வந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பண்டியராஜன்இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அந்த மாணவி படிக்கும் கல்லூரியின் பெயரையும் தெரிவித்தார்.  மேலும்  இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிஉள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த அரசாணையில் அந்த மாணவியின் பெயர்கல்லூரி பெயரும் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோதுகோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது  

இது தொடர்பான செய்திகள் :