கோவை – கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

Home

shadow


        கோவையில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞர் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

கோவை, குணியமுத்தூர், பாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது கிணற்றில் 18 வயது மதிக்கத்தக்க  ஆண் சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது.. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு,கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :