கோவை - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து இரண்டாவது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Home

shadow

             பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் தலைமையில் நேரடியாக மேற்பார்வை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்ற வாயில் முன்பாக கையில் பதாகைகள் ஏந்தியவாறு பெண் வழக்கறிஞர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்வதோடு முதன்மை குற்றவாளியாக இணைக்க வேண்டும் எனவும், அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிதி கிடைக்கும் வரை வழக்கறிஞர்களின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.a

இது தொடர்பான செய்திகள் :