கோவை, நாமக்கல், அரியலூர் - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Home

shadow


       ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முரண்பாடான தகவல்களைத் தெரிவித்து வருவதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணாகிவிட்டதாக கூறி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முகுல் வாஸ்னிக், ரஃபேல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முரண்பாடான தகவல்களைத் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் சுப. சோமு தலைமை தாங்கினார். இதேபோல், அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :