சசிகலாவை நிராகரிக்கவில்லை - டிடிவி தினகரன்

Home

shadow

                    சசிகலாவை நிராகரிக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் சந்தித்துப் பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்தது உட்பட அனைத்து அம்சங்களும் சசிகலாவின் ஒப்புதலுடன்தான் நடந்து வருவதாகத் தெரிவித்தார். அமமுக பொதுச்செயலாளராக தான் பொறுப்பேற்றதன் மூலம் சசிகலாவை நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா, அதிமுகவை மீட்டெடுக்கும் போராட்டத்தைத் தொடர்வார் என்று தினகரன் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :