சமண சமய நூல் வெளியீட்டு விழா

Home

shadow

சமண சமய நூல் வெளியீட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் அறிஞர்கள், சமய ஆர்வலர்கள் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

தஞ்சையில் சமணம் எனும் நூல், ஏடகம் எனும் அமைப்பின் சார்பில் நேற்று தஞ்சையில் வெளியிடப்பட்டது. இந்நூலை சரஸ்வதி மஹால் நூலகரும், தமிழ்ப் பண்டிதருமான, மணிமாறன் எழிதியிருந்தார். ஜினாலய பரிபாலகர், ஜினகாஞ்சி ஜைன மட ஸ்வஸ்தி, ஸ்ரீ லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சார்ய ஸ்வாமிகள், விழாவுக்கு தலைமை ஏற்று நூலை வெளியிட்டார். இந்த விழாவில் சமண சமயம் குறித்தும், தஞ்சையில் சமண சமயம் ஓங்கிய வரலாறு குறித்தும் பல்வேறு அறிஞர்கள் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், முனைவர் ஜம்புலிங்கம்கல்வெட்டு ஆய்வாளர், தில்லை கோவிந்தராஜன், புதுவைப் பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின், தமிழ்த்துறைப் பேராசிரியர் லட்சுமி தந்தை, ஜினாலயம் அறங்காவலர் அப்பாண்டைராஜ், உள்ளிட்ட தமிழறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்..

இது தொடர்பான செய்திகள் :