சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 500 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

Home

shadow


    சென்னையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 500 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

சென்னை தியாகராய நகரில் ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், தி.நகர், அசோக்நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட 5 தொகுதிகளைச் சேர்ந்த 500 கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஞ்சள், குங்குமமிட்டு நலங்கு வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :