சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்

Home

shadow

           சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்  காலமானார்  

           கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவிகளோடு உயர்நீதிமன்றத்தில் சரணடைந்த சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், சிகிச்சை பலனின்றி காலமானார். 

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

விசாரணையில், ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் சரண் அடைய ராஜகோபாலுக்கு உத்தரவிட்டது.இதனையடுத்து, கடந்த 9ஆம் தேதி அன்று செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஆம்புலன்சில் வந்து அவர் சரண் அடைந்தார்.

உடல் நிலை மோசமாக இருந்தததால், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ராஜகோபாலின் மகன் சரவணன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜகோபாலுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உதவியாளர் இன்றி நடக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், 72 வயதான ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தனர். செவ்வாய் கிழமை இரவு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இது தொடர்பான செய்திகள் :