சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்காக 440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - மாநகராட்சி

Home

shadow

 

        சென்னையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்காக 440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது என்றார். கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்து 494 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் 20 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உலக வங்கி நிதிவுதவியுடன் கூவம், அடையாறு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கொசஸ்தலை ஆறு வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும், சாலை அமைக்கும் பணிக்கு 440 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என்றும், வரும் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத நிலை ஏற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுத்து வருவதாகவும் கார்த்திகேயன் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :