சூர்யாவின் அடுத்த படம்

Home

shadow

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக கே.வி.ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

சூர்யா தற்போது என்.ஜி.கே.படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது . இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் அல்லது இறுதிச்சுற்று சுதா கொங்கரா என இரண்டு பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில், அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது   இந்தப் படத்துக்கு கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, கலை இயக்குநராக கிரண் பணியாற்றுகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

இது தொடர்பான செய்திகள் :