சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

Home

shadow


       தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையாளர்கள்  உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தல் பணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்டறியப்பட்டுள்ள 7 ஆயிரத்து 316 பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 67 ஆயிரம் காவல்துறையினரும் 34 ஆயிரம் காவல்துறை அல்லாதவர்களும் ஈடுபடவுள்ளதாக கூறினார். தேர்தல் செலவினங்களை கண்காணிக்க நாளை முதல் செலவின பார்வையாளர்களாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அனைத்து செலவினங்களும் கணக்கிடப்படவுள்ளதாகவும் முறைகேடான பணப் பரிவர்த்தனையை தடுக்கவும் பறக்கும் படையினர் மூலம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு தலைமறைவு குற்றவாளிகள் 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து  பேசிய அவர், இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 206 பொது இடங்களிலும், 1 லட்சத்து 12 ஆயிரத்து 159 தனியார் இடங்களிலும் அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :