சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்

Home

shadow

 

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

 

சென்னை புழல் மத்திய சிறையில் உளவு பார்த்த வழக்கில் அடைக்கப்பட்டுள்ள துருக்கி நாட்டைச் சேர்ந்த மஹிர் டெர்விம்  என்ற கைதிக்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டுள்ள போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோஸ், டயாஸ் ஆகியோருக்கும் இடையே இன்று காலை துணி துவைப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோஸ், டயாஸ் ஆகிய இருவருக்கும் தலையிலே பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக சிறை கண்காணிப்பு அலுவலர் உதயகுமார் அளித்த புகாரின் பேரில், புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :