சென்னை மயிலாப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழா

Home

shadow

 

       சென்னை மயிலாப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் பிரசித்திபெற்ற கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கடந்த 8 நாட்களாக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கபாலீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பங்குனி பெருவிழாவின் முக்கிய நாளான நேற்று கபாலீஸ்வரார் சிறப்பு அலங்காரங்களுடம் தேரில் எழுந்தருளினார். மயிலாப்பூரின் நான்கு மாட வீதிகளில் வளம் வந்த தேரை ஆயிரக்கண்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தேர் வலம் வந்த வீதிகளில் இருந்த குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். விழாவின் கடைசி நாளான இன்று திருஞான சம்பந்தார் பூம்பாவையை உயிர் பித்தலும், மாலையில் அறுபத்து மூவர் திருவீதியுலாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. கோலாகலமாக நடைபெற்ற அறுபத்துமூவர் திருவிழாவில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நான்கு மாட வீதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், ,குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதனிடையே பக்தர்களில் பாதுகாப்பு கருதி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான செய்திகள் :