சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீரென ரத்து

Home

shadow

 

         சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல வேண்டிய 3 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து காலையில் 5.05 மணிக்கு அந்தமான் செல்லும் ஏா் இந்தியா விமானம்,காலை 5.45 மணிக்கு திருச்சி செல்லும் ஏா் இந்தியா விமானம்,காலை 9.55 மணிக்கு டில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம் ஆகிய 3 விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதாக ஏா் இந்தியா அறிவித்தாலும்,விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஒரே நாளில் அடுத்தடுத்து 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இது தொடர்பான செய்திகள் :