சென்னை – போகி பண்டிகையையொட்டி விழிப்புணர்வு

Home

shadow


        சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

போகி பண்டிகையின்போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை பாதுகாத்திட வேண்டி விழிப்புணர்சு பிரசார வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மொத்தமாக 15 ஆட்டோக்கள் திருவொற்றியூர், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட 15 சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்களுக்கு போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர்பொருட்கள், மற்றும் டயர் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி துண்டு பிரசுரம் வழங்க உள்ளனர். இந்தப் பிரசாரத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இயக்குநர்   ஷாம்பு கல்லோலிக்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்..

இது தொடர்பான செய்திகள் :