சென்னை - பள்ளி வாகனம் ஆய்வு

Home

shadow


தகுதிச் சான்று பெறாமல் இயங்கும் பள்ளி வாகனங்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சென்னை மேற்கு மற்றும் தென் மேற்கு வட்டார அலுவலகத்துக்குட்பட்டு செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்து 490 பள்ளி வாகனங்களை போக்குவரத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட நான்கு துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதுவரை ஆய்வு செய்யப்பட்டதில் 6ஆயிரத்துக்கும் மேற்பட்டவாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தகுதிச் சான்று பெறாமல் இயங்கும் வாகனங்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :