சென்னை - லாரிகள் வேலை நிறுத்தம்

Home

shadow


சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 4வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியாகும் சரக்குகளை கையாள்வதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் சுங்கத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த சரக்கு பெட்டக நிலையங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்களை எடுத்து செல்வதில் லாரி உரிமையாளர்களுக்கும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்களுக்கும் இடையே வாடகை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அனைத்து சங்கங்களும் இணைந்து கடந்த மார்ச் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து துறைமுக நிர்வாகத்தின் தலையீட்டின்பேரில் இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை எனக்கூறி ஒரு சில கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால்  சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அழுகும் பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் வழியில் நிற்பதால் அவை வீணாகி பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :