சென்னை - +2 தேர்வு மதிப்பெண் மறு கூட்டல்

Home

shadow


பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in  www.dge1.tn.nic.in  www.dge2.tn.nic.in  என்ற இணையப்பக்கங்களில் காணலாம் எனவும், தற்காலிக மதிப்பெண் நகல்களை www.dge.tn.nic.in எனும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள், மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கான சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜுன் மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :