சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு

Home

shadow

         சென்னைக்கு  தண்ணீர் எடுத்து செல்ல  மக்கள் எதிர்ப்பு 

         தண்ணீர் பற்றாக்குறையால் அவதியடைந்து வரும்  சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல ஜோலார்பேட்டையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஏரிகள் நீரின்றி வறண்டதால், தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் பணிகளுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. 

கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள் மூலம் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் வழி திருப்பிவிடப்பட்டதால், ஜோலார்பேட்டையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறி, அங்கு வசிக்கும் மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :