சேலம் சங்ககிரி குடிநீர் விநியோகிக்கவில்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

Home

shadow

 

         சேலம் சங்ககிரி அருகே இரண்டு ஆண்டுகளாக சீரான குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா, இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கே.கே.நகர் பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக குடிநீர் வருவதில்லை எனக்கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின், ஒரு சிலரை மட்டும் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். இங்கு அதிக அளவில் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதால் இப்பகுதிக்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தற்பொழுது தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :