ஜெயலலிதா மகள் என வழக்கு

Home

shadow

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி, பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனுத்தாக்கல் செய்தார். இதனைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது. இதன்படி அம்ருதா தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கான எவ்வித ஆவணமும் தாக்கல் செய்யப்படாததால்,  இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.  அப்போது நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.  பின்னர், அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்களில் கையெழுத்து உள்ளிட்ட பல குளறுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, மனு மீதான விசாரணையை, நாளைக்கு ஒத்திவைத்தார். 

இது தொடர்பான செய்திகள் :