ஜெயா பச்சன் பணக்கார எம்.பி

Home

shadow


ஆயிரம் கோடி ரூபாய் சொத்துடன் மிகவும் பணக்கார மாநிலங்களைவ எம்.பி. என்ற பெருமையை ஜெயா பச்சன் பெற்றுள்ளார். 

 உத்திரப்பிரதேசத்தில்  முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் நடிகை ஜெயாபச்சன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஜெயா பச்சன் தாக்கல் செய்த  வேட்பு மனுவில் தனக்கு ஆயிரம் கோடி  ரூபாய்க்கு  சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் தம்பதியினருக்கு 460 கோடி ரூபாய்க்கு  அசையா சொத்துகளும், 650  கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நொய்டா, போபால், லக்னோ, அகமதாபாத், காந்தி நகரில் நிலங்கள் உள்ளன. அமிதாப்பின் நகைகளின் மதிப்பு  36 கோடி ரூபாய்  எனவும், ஜெயாபச்சன் நகைகளின் மதிப்பு  26 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் 12 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு 13 கோடி ரூபாய் ஆகும். ஜெயா பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அந்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் வேட்பு மனு செய்த போதுஅவரது சொத்து மதிப்பு 800 கோடி  ரூபாய் என தெரிவித்திருந்தார்.. அந்த சாதனையை ஜெயா பச்சன் முறியடித்து மிகவும் பணக்கார மாநிலங்களைவ எம்.பி. என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :