தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற சலங்கை நாதம் கலை விழாவில் புதுச்சேரி, அசாம் மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது

Home

shadow

இந்தியாவின் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் ஏழு இடங்களில் கலைபண்பாட்டு மையங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் லட்சத்தீவுகளை உள்ளடக்கிய தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. இதில் கடந்த 24ஆம் தேதி முதல் சலங்கை நாதம் கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த கலைவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய கலைகளை நடனமாடி வருகின்றனர். விழாவின் நான்காம் நாளான நேற்று, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது. இந்த நடனங்களை திரளான மக்கள் கண்டு ரசித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :