தடையை நீக்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

Home

shadow

                              தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்து உத்தரவிட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், மற்றும் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிராக ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களுக்குப் பின் லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதிகள், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :