தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகள்

Home

shadow

       தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகள் 


       மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

      கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனப்பகுதியில், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டமாக கிராமங்களில் உள்ள விவசாயத் தோட்டங்களில் புகுந்து நாசம் செய்து வருகின்றன.

      இந்நிலையில், ஆண் யானை ஒன்று ஓடந்துறை அருகே  மலைச் சாலையை கடந்து சென்றதால்  ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை சாலையைக் கடக்கும் போது செல்ஃபி எடுக்கக் கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பயணிகளில் பலர் செல்ஃபி எடுத்தனர்.

       மலைச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :