தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சிறப்பு விருந்தினராக பங்கேற்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார்

Home

shadow

  

         சிவகங்கை பேருந்து நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.

சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு இன்று வருகை தந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சிறப்பு விருந்தினராக பங்கேற்று தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களிடையே உறுதி மொழி ஏற்றார். இதையடுத்து, சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுத்தம் செய்து தூய்மை பணியை அவர் மேற்கொண்டார். பின்பு, சிறு வியாபார கடைகள், உணவு விடுதிகள், மற்றும் பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் தூய்மையாக இருக்கிறதா என ஆய்வு செய்த ஆளுநர், தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, கூடுதல் முதன்மை செயலாளர் ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது தொடர்பான செய்திகள் :