தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்

Home

shadow

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. எனவே ஆளுநர் உரைக்கான கோப்புகளை தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. .தி.மு. அணிகள் இணைப்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு என பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேசமயம் மழை வெள்ளம், புயல் சேதம், காணாமல் போன மீனவர்கள் என பல்வேறு பிரச்சனைகள் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. எனவே நடைபெற உள்ள கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கு சவலாக இருக்கும் என கூறப்படுகிறது

இது தொடர்பான செய்திகள் :