தமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்!

Home

shadow


            முதன் முதலில் பெண்  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனை தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் வாழ்த்தினார்.

தென் சென்னை திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் இன்று மக்களவையில் முதன் முதலில் பேசினார். அவர் பேச துவங்குவதற்கு முன்பு முதன் முறையாக மத்திய  நிதியமைச்சராக தனிபொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனை  வாழ்த்தி தனது உரையை தொடங்கினார்.  அவர் நிர்மலா சீதரமனை தமிழக மண்ணின் மகள் என்று புகழந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ’இந்திய நாடு, முற்றிலும் தொழிலாளர்களின் உழைப்பை கொண்டுதான் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தற்பொழுது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த அரசு கார்பரேட்களுக்கும், தனிப்பெரும் நிறுவனங்களுக்கும் வரிசலுகை அளித்திருக்கிறது,’ என்று சுட்டிக் காட்டினார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதிற்கு தனது எதிர்ப்பையும் மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் பதிவுசெய்தார்.  

இது தொடர்பான செய்திகள் :