தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் முறைகேடு இல்லை - விஜயபாஸ்கர்

Home

shadow

           தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் முறைகேடு இல்லை  - விஜயபாஸ்கர்

           தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் எந்த முறைகேடும் இல்லை என்று சுகாதாரத் துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதில் வெளிப்படை தன்மையுடன் தான் செயல்பட்டு வருவதாக  அவர் கூறினார்.

           சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் ஜெயகுமார் உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர்.

            நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, உடல் உறுப்பு தானத்தில் அரசு மருத்துவமனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தனியார் மருத்துமனைக்கு உடல் உறுப்புகள் வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

            தமிழகத்தை பொறுத்தவரை உடல் உறுப்புகள் தானம் செய்வதில் எந்த முறைகேடும் இல்லை, வெளிப்படைத் தன்மையுடன் தான் செய்யப்படுகின்றது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :