தமிழகத்தில் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது - ஐஜி அசுதோஷ் சுக்லா

Home

shadow

                         தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் சிறப்புப் பிரிவு ஐஜி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்றதாகவும், தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீஸார், 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி நடைபெற்றதாகவும், மதுரையில்  சித்திரை திருவிழாவுக்கும், திருவண்ணாமலை சித்திரை பௌர்ணமி கிரிவலத்தையொட்டியும் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன எனவும் தெரிவித்தார், குடியாத்தம், கள்ளக்குறிச்சி, செங்கம் நகரம், அரியலூர், கீழ் விஷாரம் ஆகியப் பகுதிகளில் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாகவும், கீழ் விஷாரத்தில் திடீரென பெருங்கூட்டம் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் வானத்தை நோக்கி சுட்டதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்துக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விரைந்து சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :