தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர விழா

Home

shadow

                   தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திர விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் கீழ்பழனியில் பிரசித்திபெற்ற பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாதம்  திருவிழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு பங்குனி உத்தரவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி  உத்திர தேர் திருவிழா வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதை முன்னிட்டு முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சிற்ப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து மாலை பங்குனி உத்திரத் தேரோட்ட திருவிழா மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.  

இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருத்தேர் விழா மிக சிறப்பாக  நடைபெற்றது. 7 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று ஆநிலையப்பர் ஆலங்காரவல்லி, சவுந்திராயகிய தேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சிவாச்சாரியர்கள் சுவாமியை ஊர்வலமாக அழைத்து வந்து திருத்தேரில் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல்   புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கைலாசநாதர் சுந்தராம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பஞ்ச மூர்த்திகளும் திருவீதி உலாவாக எடுத்துவரப்பட்டு சந்திர புஷ்கரணியில்  எழுந்தருளி பகதர்களுக்கு அருள்பாளித்தனர்

இதேபோல்  மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள சூரக்குண்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பழனியாண்டி திருக்கோவிலில்   பங்குனி திருவிழாவை முன்னிட்டு  100 மேற்பட்டோர் பூமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த விழாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வர்ர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு யானை ஓட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.  

இதேபோல் சேலம் மாவட்டம் குமரகிரியில் உள்ளரசித்தி பெற்ற பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளனமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

இது தொடர்பான செய்திகள் :