தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உள்ளது - முதல்வர் பழனிசாமி

Home

shadow

              தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உள்ளது - முதல்வர் பழனிசாமி

              தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உள்ளது என்பதை காட்டுவதாக, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

             இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் பாஜகவும், அதன் தோழமை கட்சிகளும் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர். 

              மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்றும், அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக உழைத்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

               மேலும், மக்களவைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள பாஜகவிற்கும் பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :