தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

Home

shadow

              தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

              தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

              தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது

             நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :