தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் - உலகவங்கி ரூ.2,857 கோடி நிதியுதவி

Home

shadow

             தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் - உலகவங்கி ரூ.2,857 கோடி நிதியுதவி

 
            தமிழ்நாட்டில் 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ரூ.2,857 கோடி  உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

 
           சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் , உலக வங்கி நிதியுதவி திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்துடன், உலக வங்கி கடன் உதவி ஒப்பந்த திட்டத்தின் ஒப்பந்தத்தை உலக வங்கி குழுவினர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கினார்கள்.

             அப்போது தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு உலக வங்கி பாராட்டுகளை தெரிவித்தது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

 
            தமிழ்நாட்டில் 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,857.கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

 
          இத்திட்டத்திற்காக உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் தமிழ்நாடு அரசு ரூ.857.101 கோடிகள் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.

 
       தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும், உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட முடியும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 
      மேலும், இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான செய்திகள் :