தாம்பரம் - பாரம்பரிய உணவு திருவிழா

Home

shadow

 

        தாம்பரத்தை அடுத்துள்ள படைப்பை அருகே பாரம்பரிய உணவு திருவிழாவில் சைவ, அசை உணவு பிரியர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான உணவுகள் இடம்பெற்று உள்ளன.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே பாரம்பரிய உணவு திருவிழா தொடங்கியது. ஒருவாரம் நடைபெறும் இந்த திருவிழாவில் சைவ, அசைவ உணவுகளை சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு, அதற்கான மசாலா பொருட்களை அம்மி, உரல்கள் மூலம் அரைத்து மண்பாண்டங்களில் சமைத்து வழங்கி வருகின்றனர். மேலும் உணவு விடுதிக்கு சிறுவர்களுடன் வரும் நகர மக்களுக்கு, கிராம மக்களின் சமையலை விளக்கும் வகையில், மிளகாய், தனியா, சீரகம், பருப்பு வகைகள் என மளிகைப் பொருட்களும், அதனை மின்சார பயன்பாடின்றி அம்மி, உரல், உலக்கை, முரம் என போன்ற உபகரணங்களை தெரிந்துகொள்ளும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கீத்துகொட்டகை, ஆடு, மாடு, மாட்டு வண்டி, மண்பாண்டங்கள் செய்துகாட்டும் குயவர்கள், கைரேகை பார்க்கும் பெண்மணிகள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள் போன்றவர்களையும் அனைவரும் கவரும் வகையில் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இந்த உணவு திருவிழாவில், கலந்துகொள்பவர்கள் வாய்க்கு ருசியான உணவு உட்கொள்ளலாம். மேலும், அதனை தயாரிக்கும் முறைகளையும், கிராம வாழ்க்கை முறைகளையும் அறிந்துகொள்ளும் விதமாக உணவுத் திருவிழா அமைத்துள்ளதாக அங்கு வருகை தந்த மக்கள் தெரிவித்தனர். (பைட்)

இது தொடர்பான செய்திகள் :