திமுக கூட்டணியில் ஓராயிரம் கார்த்தியை நிறுத்தினாலும் சிவகங்கை தொகுதியில் எச் ராஜா வெற்றி பெறுவது உறுதி - விஜயபாஸ்கர்

Home

shadow

                      திமுக கூட்டணியில் ஓராயிரம் கார்த்தியை நிறுத்தினாலும் சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர எச் ராஜா  வெற்றி பெறுவது உறுதி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்ட செயல்வீரர் கூட்டம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக கூட்டணியை கண்டு திமுக திக்குமுக்காடி வருவதாகவும் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் ஓராயிரம் கார்த்தியை நிறுத்தினாலும் சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எச் ராஜா  வெற்றி பெறுவது உறுதி என்றும், தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :