திமுக தலைவர் ஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிகாரிகள் சோதனை

Home

shadow

திமுக தலைவர் ஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிகாரிகள் சோதனை 

தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள தனியார் விடுதியில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  

தமிழகத்தில் மே 19ம் தேதி ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உட்பட 4  சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணப்பட்டுவாடா நடக்க உள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில்  சோதனை நடத்தினர். மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையும் மேற்கொண்டனர். இதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வாகனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இது தொடர்பான செய்திகள் :