திருச்சி - தமிழிசை

Home

shadow


காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்காதவாறு மத்திய அரசு செயல்படும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், கர்நாடகாவில் பாரதிய ஜனதா மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றும், அங்கு நிச்சயம் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  கர்நாடகாவில் பாரதிய ஜனதா தனிப்பான்மை பெற்றதற்கு மக்கள் அளித்த மிகப் பெரிய ஆதரவே காரணம் என தெரிவித்தார். மேலும் காவிரி நதி நீர்ப் பங்கீட்டில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத அளவுக்கு மத்திய அரசு செயல்படும் என்றும், பாரதிய ஜனதாவை மதச் சார்புள்ள கட்சி என்று கூறும் காங்கிரஸ்தான், கர்நாடகாவில் பிரிவினையைத் தூண்டியுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :