திருச்சி - தொழிற்சாலை தின விழா

Home

shadow

 

        திருச்சி திருவெறும்பூரில் உள்ள மத்திய பாதுகாப்பு நிறுவனமான எச்.ஏ.பி.பி யில் படைகலன் தொழிற்சாலை தின விழாவை முன்னிட்டு ராணுவ தளவாடங்கள் புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலையின் 218 வது படை கலன் தொழிற்சாலை தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலைகளில் ஆயுதம் மற்றும் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்தியாவில் கொல்கத்தா மாநிலத்தில் கடந்த 1802 ஆம் ஆண்டு முதன் முதலில் படைகலன் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 41 படை கலன் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த படை கலன் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 18 ஆம் தேதி படை கலன் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் மனோகர் பாரிக்கர்  உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து ஒரு நாள் கழித்து  இந்த ஆண்டு 19ம் தேதி படை கலன்  தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த கண்காட்சியை தொழிற்சாலை  ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  கண்டுகளித்தனர். இதனை தொடர்ந்து நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

இது தொடர்பான செய்திகள் :