திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா

Home

shadow

 

       திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

கந்த சஷ்டி விழாவையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலை புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது மலேஷியா, இலங்கை, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, அங்கப்பிரதட்சணம் செய்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். வரும் 13-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதேபோல் திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன் துணைக் கோவிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுகசாமி கோவிலிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியது. முருகனின் மற்ற படை வீடுகளில் சூரசம்ஹாரம் நடைபெறும் நிலையில், திருத்தணியில் மட்டும் புஷ்பாஞ்சலி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :