திருப்பதி திருமஞ்சனம்

Home

shadow


தெலுங்கு வருடப்பிறப்பு தினமான உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்பட்டு, சுவர்களுக்கு சுகந்த திரவிய கலவை கோவில் பூசப்பட்டது.

 தெலுங்கு வருடப்பிறப்பு, பிரமோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமை அன்று ஏழுமலையான் கோவிலை, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் கழுவி சுத்தம் செய்து கோவில் சுவர்களுக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் தயார் செய்யப்பட்ட நறுமன கலவையை கோவில் சுவர்களுக்கு பூசுவது வழக்கம். அதன்படி வரும் 18ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதியை முன்னிட்டு, இன்று  கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கருவரை, பிரசாத தயாரிப்பு கூடங்கள், ஏழுமலையான் கோவிலில் உள்ள துனை கோவில்கள், ஏழுமலையான் கோவில் தங்க கோபுரம் ஆகியவை உட்பட கோவில் முழுவதையும் கழுவி சுத்தம் செய்தனர். தொடர்ந்து கோவில் சுவர்களுக்கு பல்வேறு சுகந்த திரவியங்களால் தயார் செய்யப்பட்ட நறுமன கலவை பூசப்பட்டது. பின்னர் ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டு தூப, தீப, நைவேத்தியங்கள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :