திருப்பதி - தரிசன டிக்கெட் ரத்து

Home

shadow


     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நடை பாதை வழியே திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசன டிக்கெட் உட்பட பல்வேறு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில, வரும் 16-ஆம் தேதி  கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று முதல் வரும் 16 ஆம் தேதி வரை யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, குறைந்த கால நேரத்துக்கு இலவச தரிசனத்தின் மூலமாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அனைத்து சேவைகளும், அதாவது மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயது குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்ட இதர அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு டிக்கெட், மலைப்பாதையில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவதும் இன்று அதிகாலை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனத்துக்கான கால நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள கால நேரத்திற்கு ஏற்ப பக்தர்கள் ஒத்துழைப்பு அளித்து ஏழுமலையான் தரிசனத்தை மேற்கொள்ளுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :