திருப்பதியில் ஆள்கடத்தலில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Home

shadow

சேலத்தை சேர்ந்த செல்வம், சத்தியராஜ் ஆகியோர் சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்த போது, சிலர் அவர்களை கடத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்காக அங்கு சென்ற உறவினர்கள், கடத்தல் சம்பவம் குறித்து சித்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஊர்காவல்படை வீரர் மோகன் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் திலீப், கிஷோர், திலீப்குமார் ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் செம்மரம் கடத்தலுக்காக திருப்பதி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்தனர். மேலும் செம்மரக் கடத்தலுக்காக அவர்களை அனுப்பி வைத்த ராமன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான செய்திகள் :