திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும்

Home

shadow

             திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் .கே. போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்து வழக்கை சுட்டிக் காட்டி திருப்பரங்குன்றம் தேர்தல் தேதியை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் .கே. போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :